வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாவது பட்ஜெட்டின் வாயிலாக அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை சிறிது உயர்த்துவதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் தற்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான முழுமையான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான சம்பள முறை மற்றும் ஓய்வூதிய முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஆய்வு அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் சிறிது உயர்த்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய செய்திகள்
வரும் பட்ஜெட்டில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு
Related News

சொத்துப் பிரகடன வழக்கு: இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


