கோலாலம்பூர், மே 29-
மெத்திலினெடியோக்சி மெத்தம்பேட்டமைன் வகையைச் சேர்ந்த போதைப்பொருளை கடத்தியதற்காக போலீசார் இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 33.65 மில்லியன் வெள்ளி மதிப்பிலான போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3.50 மணியளவில் செந்தூலில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 32 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.
இச்சோதனையில் ஊதா நிற பவுடர்களை உள்ளிட்ட 13 ஜாடிகள், 213.4 கிலோகிராம் எடையுள்ள MDMA ஜூஸ் பவுடர் அடங்கிய 499 பச்சை நிற பிளாஸ்டிக் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக காவ் கோக் சின் கூறினார்.
சந்தேகிக்கும் அந்நபர்கள் மீது ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பாக 10 குற்றப்பதிவுகள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த வேளை, வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி வரையில் ஏழு நாட்களுக்கு அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக காவ் கோக் சின் விளக்கினார்.








