Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சமயப் பள்ளி வார்டனுக்கு 6 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சமயப் பள்ளி வார்டனுக்கு 6 ஆண்டு சிறை

சிரம்பான், ஜூன்.12-

கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை சமயப்பள்ளி ஒன்றின் 7 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக அந்தப் பள்ளியின் வார்டன் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் இரண்டு பிரம்படித் தண்டனையை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

38 வயது முகமட் கைரி ஃபிட்ரி என்ற அந்த வார்டன், நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த வார்டன் பிடிப்பட்ட தினத்திலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி டத்தின் சுரிதா தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான், ஜெம்போலில் உள்ள ஒரு சமயப் பள்ளியில் 12 க்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்ததாக அந்த வார்டன் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு