Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26.

பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் -கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் வெளிநாட்டவர் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் 40 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குத்திக் கொண்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கமிஷனர் ஷாஹ்ருல்நிசாம் ஜாபார்@ இஸ்மாயில் தெரிவித்தார்.

சண்டையில் பாதிக்கப்பட்டவர் முதலில் அந்நபரை உதைத்த வேளையில் குற்றசாட்டப்பட்டிருக்கும் அவ்வாடவர் அதை பொருத்து கொள்ளாது மேலும் பலமுறை அந்நபரை குத்தி காயம் ஏற்படுத்தியதாக ஷாஹ்ருல்நிசாம் குறிப்பிட்டார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்ததாக அவர் மேலும் விளக்கமளித்தார்.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் கைது செய்யப்பட்டு மார்ச் 29 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஷாஹ்ருல்நிசாம் இன்று அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்