கோலாலம்பூர், மே.05-
சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளை ஏற்றிச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று ஓமனின் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இது குறித்து ஹஜ் நிதிய நிறுவனமான Tabung Haji வெளியிட்டுள்ள அறிக்கையில், MH8110 என்ற விமானம் பாதுகாப்பு கருதி தரையிறக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த 278 ஹஜ் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், அவர்களின் குடும்பத்தினர் கவலைப்படத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








