Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தொலைபேசி ஸ்கேமில் சேமிப்பை இழந்தார் ஓய்வு பெற்ற ஆசிரியர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொலைபேசி ஸ்கேமில் சேமிப்பை இழந்தார் ஓய்வு பெற்ற ஆசிரியர்

தொலைபேசி ஸ்கேம் மோசடியில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் பெண் ஆசிரியர் ஒருவர் , தனது வாழ்நாள் சேமிப்பான 2 லட்சத்து 16 ஆயிரம் ரிங்கிட்டை இழந்தார்.

காப்புறுதி நிறுவனத்தின் அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரி என்று ஆள்மாறாட்டம் செய்த தனிநபர், தொலைபேசி வாயிலாக 61 வயது முன்னாள் பெண் ஆசிரியர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபரின் பேச்சை நம்பிய அந்த முன்னாள் ஆசிரியர், பெரும் தொகையை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளானதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

காப்புறுதி நிறுவனத்திலிருந்து போலியான ஆவணங்களைத் தாம் பயன்படுத்தி 68 ஆயிரம் ரிங்கிட் பணத்தைக் கோரியதாக பொய்யானத் தகவலை வழங்கி, தாம் மிரட்டப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியவில்லை என்று அந்தப் பெண்மணி தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக டத்தோ யஹாயா குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →