முடிதிருத்தும் கடைகள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உள்ளிட்ட மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்குப் பணிக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று
மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
முன்னதாக, முடக்கப்பட்ட மூன்று தொழில்
துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான விரிவான
விஷயங்கள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டார்.
இன்னும் விரிவான விஷயங்கள் இருந்தால், வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அவை குறித்து தாம் முறையாக அறிவிக்கவிருப்பதாக இன்று H.R.D. Corp. நிறுவனத்தின் தேசிய பயிற்சி குறியீட்டை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.








