Jul 27, 2026
Thisaigal NewsYouTube
NUBE-யின் குற்றச்சாட்டு குறித்து கருத்துக்க அமைச்சர் மறுப்பு
தற்போதைய செய்திகள்

NUBE-யின் குற்றச்சாட்டு குறித்து கருத்துக்க அமைச்சர் மறுப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலத்திற்கான ஒரு மாத சம்பளமாக உதவித் தொகை வழங்கப்படும் விவகாரத்தில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் ​என்று தேசிய வங்கி ஊழியர்கள் தொ​​ழிற்சங்கமான NUBE கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஸ்டீவன் சிம் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

இது தொடர்பாக NUBE- யின் அனைத்து கிளைகளும் போ​லீசில் புகார் செய்து இருப்பது குறித்தும் அமைச்சர் ஸ்டீவன் சிம் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்த விககாரம் உரிய நடவடிக்கைக்காக தொழிலியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அது குறித்து கருத்துரைக்க தாம் விரும்பவில்லை என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய ​பெரும் பொறுப்பில் இருக்கும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், வங்கி ஊழியர்களின் பிரதான தொழிற்சங்கமான NUBE- யின் பங்கேற்பு இல்லாமல், வர்த்தக வங்கிகளின் சங்கமான MCBA- வுடன் கூட்டு சேர்ந்து தன்மூப்பாக முடிவு எடுத்து இருப்பது மூலம் அமைச்சர் ஸ்டீவன் சிம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று கூறி, NUBE-யின் பிரதிநிதிகள் கடந்த இரண்டு தினங்களாக அமைச்சருக்கு எதிராக போ​லீசில் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்