May 22, 2026
Thisaigal NewsYouTube
சபா குடிநுழைவுத்துறை அதிகாரிகள் 232 பேரை தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்
தற்போதைய செய்திகள்

சபா குடிநுழைவுத்துறை அதிகாரிகள் 232 பேரை தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்

Share:

கோத்தா கினபாலு, மே 29-

இந்தோனேசியா, தவாவ்- விலிருந்து டெர்மினல் துணோன் தக்கா - விற்கு கடல்வழியாக சட்டவிரோதமாக குடியேறிய 232 இந்தோனேசிய பிரஜைகள் உட்பட குழந்தைகளையும் மலேசிய குடிநுழைவுத்துறை பாதுகாப்பாக அவர்களின் தாயகத்திற்கு திரும்பி அனுப்பி வைத்தனர்.

இதில், 123 ஆண்கள், 72 பெண்கள் மற்றும் இரண்டு முதல் 6 வயது வரையிலான 37 குழந்தைகள் அடங்குவர் என்று சபா குடிநுழைவுத்துறையின் இயக்குநர் டத்தோ எஸ்எச் சித்தி சாலேஹா ஹபீப் யூசூப் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் இதற்கு முன்னதாக கோத்தா கினாபாலு, பாபார் உட்பட சண்டாக்கான் ஆகிய இடங்களின் குடிநுழைவுத்துறையிலுள்ள டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சித்தி சாலேஹா கூறினார்.

இந்த இடமாற்ற நடவடிக்கை நாட்டின் சட்ட நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களின் நாட்டிலுள்ள தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டதாக சித்தி சாலேஹா மேலும் விவரித்தார்.

Related News