தற்போது ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாக மூடா கட்சியின் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் மிரட்டல் விடுத்துள்ளார்.
துணைப் பிரதமர் அகமாட் ஸாஹிட் விவகாரத்தில் தெளிவான விளக்கத்தை வழங்க சட்டத்துறை அலுவலகம் தவறுமானால், ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மூடா மீட்டுக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருப்பதாக சைட் சாடிக் இன்று கோடி காட்டியுள்ளார்.








