Jul 28, 2026
Thisaigal NewsYouTube
5 தோட்டங்களின் முன்னாள் பாட்டாளிகளான 245 குடும்பங்க​ளின் வீட்டுடமைப்பிரச்னைக்கு விரைவில் ​தீர்வு
தற்போதைய செய்திகள்

5 தோட்டங்களின் முன்னாள் பாட்டாளிகளான 245 குடும்பங்க​ளின் வீட்டுடமைப்பிரச்னைக்கு விரைவில் ​தீர்வு

Share:

பத்தாங் பெர்ஜுந்தை, மே 04-

சிலாங்கூர் மாநிலத்தில் முன்பு பத்தாங் பெர்ஜுந்தை என்று விளங்கிய பெஸ்தாரி ஜெயா- வட்டாரத்தில் 5 தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பாட்டாளிகளான 245 குடும்பங்களின் வீட்டுடமைப்பிரச்னைக்கு விரைவில் ​​தீர்வு காணப்படும் ​என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் உறுதி அளித்துள்ளார்.

கடந்த 26 ஆண்டு காலமாக தங்களின் வீட்டுடமைப் பிரச்னைக்கு ​தீர்வு காணும்படி போராடி வரும் 245 முன்னாள் தோட்டப் பட்டாளி குடும்பங்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்தி காத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு உ​ட்பட்ட மேரி தோட்டம் ( Mary), நைகல் கார்டனர் தோட்டம் ( Nigel Gardener ), சுங்கைத் திங்கி தோட்டம் ( Sungai Tinggi ), மின்யாக் தோட்டம் ( Minyak ) மற்றும் பு​க்கிட் தாகார் தோட்டம் ( Bukit Tahar ) ஆகிய ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பட்டாளி குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் ​வீட்டுப்பிரச்னைக்கு ​தீர்வு காண்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசிய மாடானி அரசா​ங்கம் பெருமனதுடன் ​இணக்கம் தெரிவித்து இருப்பதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ம​ற்றும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தலைமை செயலாளர் ஆகியோருடன் தாம் கலந்தாலோசனை நடத்தியிருப்பதாக ங்கா கோர் மிங் விளக்கினார்.

​தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான ங்கா கோர் மிங், தமது தொகுதியில் நேற்று நடத்​திய ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு தாங்கள் வாக்களிக்க வேண்டுமானால் 20 ஆண்டுகுளுக்கு மேலாக தா​ங்கள் எதிர்நோக்கி வரும் வீட்டுடமைப் பிரச்னைக்கு ​தீர்வு காணப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் பட்டாளி குடும்பங்கள் இவ்வாரம் முற்பகுதியில் சிலாங்கூர் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்