May 26, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகளின் தனித்துவமான திறனை வளர்ப்பதில் SunShine Kids மழலையர் பள்ளி
தற்போதைய செய்திகள்

குழந்தைகளின் தனித்துவமான திறனை வளர்ப்பதில் SunShine Kids மழலையர் பள்ளி

Share:

நவ. 23-

குழந்தைகளின் தனித்துவமான திறனை வளர்ப்பதிலும், அவர்களின் வயதுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை வழங்குவதிலும் முன்னணி பாலர் பள்ளி, மழலையர் பள்ளி, மழலையர் பராமரிப்பு வளாகம் என்ற பன்முக அந்தஸ்துடன் எண்ணற்ற சிறார்களின் கல்வித்திறனை வளர்ப்பதில் களங்கரை விளக்கமாக விளங்கி வரும் SunShine Education Group (M) Sdn. Bhd. நிறுவனத்தின் SunShine Kids மழலையர் பள்ளி, 2025 கல்வி ஆண்டின் சிறார்கள் சேர்க்கைக்கான கல்விப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

மலேசிய கல்வி அமைச்சின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை கொண்டு இருக்கும் SunShine Kids மழலையர் பள்ளி, நெகிரி செம்பிலான் Port Dickson, Teluk Kemang Seremban 2 மற்றும் Forest Heights Senawang ஆகிய நான்கு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

SunShine Kids முதலாவது, மழலையர் கல்விக் கிளை தலைமையகம், கடந்த 2015 ஆம் ஆண்டு போர்ட்டிசனில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அதிகாரப்பூர்வமாக திறப்புவிழா கண்டது.

அதன் பின்னர் இரண்டாவது கல்வி வளாகம் தெலுக் கெமாங்கிலும், மூன்றாவது கல்வி வளாகம் 2018 ஆம் ஆண்டில் Seremban 2 விலும் ( சிரம்பான் டூ ) நான்காவது கிளை வளாகம் இவ்வாண்டு Forest Heights Senawang- கிலும் திறப்பு விழா கண்டதாக கூறுகிறார் SunShine Education குழுமத்தின் தோற்றுநரும், நிர்வாக இயக்குநருமான Dr. R.V. Shyam Prasad.

SunShine Kids- ஸின் நான்கு கல்வி வளாகங்களும், முழு வசதிகளை தாங்கிய நிலையில், அனுபவம் வாய்ந்த நிபுணத்துவ ஆசிரியர்கள், வேடிக்கை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த கற்றல், கற்பித்தல் சூழல், /அன்பு கலந்த கனிவான கவனிப்பு என்ற நிலையில் 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற, பொருத்தமான மழலையர் பள்ளியாகும் என்று பெற்றோர்களால் பெரிதும் புகழப்பட்டு வருகிறது..

SunShine Kids பாடத்திட்டமானது, குழந்தைகளின் சமூக திறன்களை வளர்ப்பதற்கு ஆங்கிலம், மலாய், மண்டரின் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் வலுவான அடித்தளத்தை வழங்கும் வகையில் பாட முறை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தமிழ்மொழியை போதிக்கும் நாட்டின் முதலாவது தனியார் மழலையர் பள்ளி என்ற பெருமையையும் Sunshine Kids பெற்றுள்ளது.

Sunshine Kids மழலையர் பள்ளியில் அப்படியென்ன தனித்துவமான சிறப்பு?

மழலையர்கள் மத்தியில் ஆங்கிலமொழித்திறனை வலுப்படுத்துவதே இப்பள்ளியின் முதன்மையான நோக்கமாகும் என்கிறார் SunShine Education குழுமத்தின் தோற்றுநரும், நிர்வாக இயக்குநருமான Dr. R.V. Shyam Prasad.

அனைத்து வசதிகளும் ஒரு குடையின் கீழ் என்ற தாரக சொல்லுடன் எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்தல். அவர்களின் வளர்ச்சியில் அனைத்து அம்சங்களிலும் பிரத்தியேக கவனம், அவர்களுக்கான முழுமையான கல்வியை உறுதி செய்தல் ஆகியவை SunShine Education குழுமத்தின் பிரதான இலக்காகும் என்று Dr. R.V. Shyam Prasad குறிப்பிடுகிறார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு