Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குற்றப்பதிவை கொண்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

குற்றப்பதிவை கொண்டுள்ளார்

Share:

கிளந்தான், மாச்சாங், ஜாலான் ஹூத்தான் குயின் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர், குற்றப்பதிவை கொ​ண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர்த்தகரான 38 வயதுடைய அந்த நபர், உபரி பாகங்கள் விற்பனை கடைக்கு முன், தனது காரி​ல் அமர்ந்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கிளந்தான் மாநில போ​லீஸ் தலைவர் முஹமாட் சாக்கி ஹருன் சாக்கி ஹருன் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளோட்டி, அந்த வாகனத்திற்கு அருகில் மிக நெருக்கமான இடைவெளியில் அந்த வர்த்தகரை சுட்டுக் கொன்று இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முஹமாட் சாக்கி குறிப்பிட்டார்.
இது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நடந்த தாக்குதலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News