ஹரி ராயாவையொட்டி, வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 6 வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருக்கும் தம்முடைய மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்வில் மக்கள் திரளாக கலந்துக்கொள்ளும் படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தப் பொது உபசரிப்பு, வெகு விமரிசையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மக்களின் வருகையைத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது பொது உபசரிப்பு, ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை alor setar ரில் நடைபெறும். அதே வேளையில் மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பினாங்கு, பெர்மாதா பாவ்விலும், மறுநாள் காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை சிரெம்பானிலும் பொது உபசரிப்பு நடைபெறும். இதர மூன்று நிகழ்வுகள் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் நடைபெறும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


