May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்துக்குறித்த முழு அறிக்கைக்காக கல்வி அமை‌ச்சக‌ம் காத்திருக்கிறது
தற்போதைய செய்திகள்

விபத்துக்குறித்த முழு அறிக்கைக்காக கல்வி அமை‌ச்சக‌ம் காத்திருக்கிறது

Share:

Negeri Sembilan, Bahau சந்திப்பிற்கு அருகிலுள்ள Jalan Kuantan - Segamat சாலையில் சுற்றுலா பேருந்து மற்றும் டிரெய்லர் விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்த வேளை 36 பேர் படுங்காயத்திற்கு ஆளாகியுள்ள சம்பவ தொடர்பில், அதன் முழு அறிக்கைக்காக கல்வி அமை‌ச்சக‌ம் காத்திருக்கிறது.

இச்சம்பவத்தை எண்ணி தாம் வருத்தமடைவதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.

இந்த விபத்துக்குறித்த காரணத்தை கண்டறிவதற்கு தமது தரப்பு முழுமையான அறிக்கைக்கு காத்திருப்பதுடன் அதை கிடைக்க பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக Fadhlina Sidek கூறினார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களின் நலன் குறித்து கண்காணித்து வருவதாக Fadhlina Sidek அறிவித்தார்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை இழந்திருக்கும் மாணவர்கள் உட்பட சக பணியாளர்களுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்கு நாளை பள்ளிக்கு ஆலோசகர்கள் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக அவர் தகவலளித்தார்.

Related News