Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கேமரன் மலை நிலச்சரிவு - அறிக்கைக்காகக் காத்திருக்கும் அமைச்சு
தற்போதைய செய்திகள்

கேமரன் மலை நிலச்சரிவு - அறிக்கைக்காகக் காத்திருக்கும் அமைச்சு

Share:

கடந்த வெள்ளிக் கிழமை 5 பேர் மரணத்திற்குக் காரணமான கேமரன் மலை நிலச்சரிவு குறித்த முழுமையான அறிக்கைக்காக இயற்கை வளம், இயற்கை நிலைத்தன்மை அமைச்சு காத்திருக்கிறது என அதன் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமாட் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதேபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்பதற்காக, அவரது தரப்பு இந்தச் சம்பவத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்

தமது அமைச்சுடன் இணைந்து மாநகர் மன்றம், மாநில அரசு போன்ற இதர தரப்பினரும் தகவல்களைத் திரட்டி வருகின்றதாகவும் நிக நஸ்மி சொன்னார்.

Related News