Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்துவுடனான கூட்டணி: பாஸ் கட்சி முக்கிய முடிவு எடுத்ததாகத் தகவல்
தற்போதைய செய்திகள்

பெர்சத்துவுடனான கூட்டணி: பாஸ் கட்சி முக்கிய முடிவு எடுத்ததாகத் தகவல்

Share:

பாஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சியான பெர்சத்துவுடனான எதிர்கால உறவு மற்றும் அரசியல் வழிகாட்டுதல் குறித்து இன்று இரவு நடத்திய அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இவ்விரு கட்சிகளின் உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதை பாஸ் தலைவர்களின் கருத்துக்கள் காட்டுகின்றன. பாஸ் தகவல் தொடர்புத் தலைவர் அகமட் ஃபத்லி ஷாரி தனது முகநூல் பக்கத்தில், "பாதிக்கப்பட்ட நம்பிக்கையை அவ்வளவு எளிதாக மீட்டெடுக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் விவகாரத்தில், பெர்சத்து கட்சி தன்னிச்சையாகச் செயல்பட்டது தங்களின் நம்பிக்கையை உடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இக்கூட்டணியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Related News

பெர்சத்துவுடனான கூட்டணி: பாஸ் கட்சி முக்கிய முடிவு எடுத்த... | Thisaigal News