Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆயுதமேந்தி, கலவரத்தில் ஈடுபட்டதாக 14 ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆயுதமேந்தி, கலவரத்தில் ஈடுபட்டதாக 14 ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கேங் 24 குண்டர் கும்பலில் உறுப்பியம் பெற்றது மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்டதாக வயது குறைந்த 3 இளைஞர்கள் உட்பட 14 பேர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

15 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 14 பேரும், நீதிபதி நூர் ஐனி யூசோப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

பாராங் மற்றும் மரக்கட்டைகளை ஆயுதமாக பயன்படுத்திய இவர்கள், 21 வயது இளைஞரை தாக்கி கடும் காயம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த 14 பேரும் கடந்த மே 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணியளவில் பினாங்கு செபெராங் பெராய் உத்தாரா மாவட்டத்தில் தாமான் பூங்கா ராயா, லோரோங் பூங்கா ராயா 2 என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த 14 பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்