Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கணேஷ்பரனை பிடிப்பதற்கு சிவப்பு நோட்டீஸ் பெற முடியவில்லை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது
தற்போதைய செய்திகள்

கணேஷ்பரனை பிடிப்பதற்கு சிவப்பு நோட்டீஸ் பெற முடியவில்லை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது

Share:

கோலாலம்பூர், மார்ச் 27-

ஆட்சியாளர்களையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து அவமதித்து, காணொளி வெளியிட்டு வரும் ஒரு மலேசியரான கணேஷ்பரன் நடராஜாவை பிடிப்பதற்கு அனைத்துலக போலீஸ் பிரிவான இன்டர்போல்- லிடமிருந்து சிவப்பு நோட்டீஸ் பெற முடியவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி மோஹட் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இனம், மதம், ஆட்சியாளர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மலேசிய போலீஸ் துறை கையாண்டு வரும் 3R விவகாரம், அனைத்துலக போலீஸ் பிரிவான Interpol பட்டியலில் இடம் பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டுள்ளது.

எனவே 3R பிரிவின் கீழ் கணேஷ்பரனை பிடிப்பதற்கு மலேசிய போலீஸ் துறை இதற்கு முன்பு செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு Interpol- லின் சிவப்பு நோட்டீஸ் அனுமதியை பெற முடியவில்லை என்று டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி விளக்கினார்.

இதன் காரணமாகவே கணேஷ்பரனின் மலேசிய அ னைத்துலக கடப்பிதழை ரத்து செய்யுமாறு மலேசிய குடிநுழைவுத்துறையை போலீசார் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு கணேஷ்பரனின் அனைத்துலக கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் மோஹட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கணேஷ்பரன் மலேசியாவை விட்டு, வெளியேறிவிட்டார். அதன் பின்னர் அவர் தாயகத்திற்கு திரும்பவில்லை. அவர் தற்போது ஜெர்மனியின் துறைமுக நகரான ஹம்பேர்க்- கில் இருப்பதாக நம்பப்படுகிறது.

மதம், இனம் மற்றும் அரச பரிபாலனத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி, காணொளி வெளியிட்டு வரும் கணேஷ்பரனுக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 3R பிரிவின் கீழ் 22 விசாரணை அறிக்கைகளை புக்கிட் அமான் போலீசார் திறந்துள்ளதாக மோஹட் ஷுஹைலி தெரிவித்தார்.

கணேஷ்பரன் ஆகக்கடைசியாக வெளியிட்டுள்ள காணொளியில் இஸ்லாமிய சமயத்தையும், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ் ஷாஹ்- வையும் அவமதித்துள்ளார்.

அதேவேளையில் மலேசிய போலீஸ் படையினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாறுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்