5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி, வாகன சக்கரங்களில் அரைப்பட்டு உயிரிழந்த வேளையில் அவரின் நண்பர் கால் முறிவுக்கு ஆளாகினார்.
இச்சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை 207 ஆவது கிலோமீட்டரில் அலோர் காஜா அருகே நிகழ்ந்தது.
தொழிற்சாலை ஒன்றின் டெக்னிஷனாக பணியாற்றி வந்த 29 வயது எம்.குமரேசன் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷத் அபு அடையாளம் கூறினார்.
தலையிலும் வயிற்றிலும் கடும் காயத்திற்கு ஆளான குமரேசன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அர்ஷத் அபு குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


