Jul 8, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் குவாரி மயான வளாகத்தை மேம்படுத்த 45 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: மாநகரமன்றத் தலைவர்
தற்போதைய செய்திகள்

ஜாலான் குவாரி மயான வளாகத்தை மேம்படுத்த 45 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: மாநகரமன்றத் தலைவர்

Share:

கோலாலம்பூர் ஜாலான் குவாரியில் அமைந்துள்ள, முஸ்லிம் அல்லாதோருக்கான மயான வளாகத்தை 45 மில்லியன் ரிங்கிட் செலவில் மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளன.

13-ஆவது திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்றும், இதன் மூலம் தற்போதுள்ள ஏழு தகன மேடைகளுடன் கூடுதலாக 3 மின்னியல் தகன மேடைகள் கட்டப்படும் என்றும் கோலாலம்பூர் மாநகரமன்றத் தலைவர், டத்தோ பண்டார் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட் தெரிவித்துள்ளார்.

1977 முதல் மாநகரமன்றத்தால் இயக்கப்படும் இந்த ஒரே மயானத்தில் ஆண்டுக்கு 5,800-க்கும் அதிகமான எரியூட்டல்கள் நடப்பதால், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கொக் வாய் வலியுறுத்தினார்.

Related News