கிழக்குக் கரை விரைவுச்சாலை 3 திட்டத்திற்கான சுங்கக் கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் மஸ்லான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆய்வின்படி இதன் கட்டணம் 80 ரிங்கிட்டாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலவரப்படி கட்டுமான மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கொண்டே இறுதி கட்டணம் முடிவு செய்யப்படும் என்றார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட இந்த எல்பிடி3 திட்டத்தின் கீழ், கோலா திரெங்கானு கம்பங் கெமுரோவிலிருந்து கோத்தா பாரு துஞ்சோங் வரை 122 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழி விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது.
2022 மதிப்பீட்டின்படி 9.8 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுச் செலவு கொண்ட இத்திட்டத்திற்கான விருப்பக் கோரிக்கை ஆவணத்தை இந்தாண்டுக்குள் இறுதி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதுடன், இதன் முழு கட்டுமானச் செலவையும் ஏலத்தை எடுக்கும் தனியார் நிறுவனமே ஏற்கும் என்றும் அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.








