Jul 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 40°C வரை வெப்பம் உயரலாம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 40°C வரை வெப்பம் உயரலாம்

Share:

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சூப்பர் எல் நினோ தாக்கம் தீவிரமடைவதால், மலேசியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

இது குறித்து மெட்மலேசியா துணை தலைமை இயக்குநர் அம்புன் திந்தாங் கூறுகையில், இந்த வலுவான எல் நினோ நிலை இந்த ஆண்டு நவம்பர் தொடங்கி 2027-ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறையக்கூடும் என்றும், குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையை சமாளிக்க சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகள் முன்கூட்டியே தயார் நிலையை தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News