பினாங்கு, புக்கிட் தெங்காவில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மின்னணு கழிவு பதனிடும் மற்றும் சேமிப்புக் கிடங்கு ஒன்றை நேற்று போலீசார் முற்றுகையிட்டனர். இச்சோதனையில் 11 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக செபராங் பிறை தெங்கா தற்காலிக போலீஸ் சிஃப் நொராசிசி சாத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறை மற்றும் நகராண்மைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில், பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 80 இ-கழிவு பாளங்களும், கணினி உதிரிபாகங்கள் அடங்கிய 8 பெரிய பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
முறையான உரிமம் இன்றி செயல்பட்டதற்காக அந்த ஆலையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அனைவரும் குடிநுழைவு சட்டத்தின் கீழ் வரும் ஜூலை 20-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.








