Jul 7, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்: சடாவ் எல்லைச் சாவடி ஜூலை 11 முதல் திறப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்: சடாவ் எல்லைச் சாவடி ஜூலை 11 முதல் திறப்பு

Share:

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் வரும் வியாழக்கிழமை முதல் மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயணம் அமைகிறது. இதற்கிடையே, சோங்க்லாவில் உள்ள புதிய நிரந்தர 'சடாவ்' எல்லைச் சாவடி வரும் ஜூலை 11 முதல் திறக்க தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதுள்ள சாவடிக்கு மாற்றாக அமையும் புதிய சாவடி, மலேசியாவின் கெடா, புக்கிட் காயூ ஈத்தாம் சாவடியுடன் இணைக்கப்படும். இது தாய்லாந்து நேரப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News