மலாய் சமூகத்தின் சிறப்பு உரிமைகள் கூட்டரசு அரசியலமைப்பில் தெளிவாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அதனை எந்தவொரு அரசியல் கட்சியும் சொந்தம் கொண்டாடவோ அல்லது அரசியலாக்கவோ முடியாது என தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதால், இதனை எளிதில் மாற்றிவிட முடியாது என்று அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
தேர்தல் காலம் என்பதால், சமூக ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என வலியுறுத்திய அவர், அம்னோ மற்றும் தேசிய முன்னணி மட்டுமே மலாய் சமூகத்தைப் பாதுகாக்க முடியும் என கைரி ஜமாலுதீன் அண்மையில் கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.








