சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்களின் தொழுகை அறைகளில் தற்போது வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா அனுமதி வழங்கவில்லை என்று சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றமான மைஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து மைஸ் தலைவர் டத்தோ சலேஹுதீன் சைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக வளாகங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டால், தற்போது அனுமதி பெற்றுள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிலாங்கூர் முழுவதும் 448 மசூதிகளும், 379 பள்ளிவாசல்களும், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும், அவை மாநில முஸ்லிம்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெரும்பாலான வணிக வளாகங்களுக்கு அருகிலேயே மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்கள் இருப்பதால், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை அங்கு எளிதாக நிறைவேற்ற முடியும் என்றும் டத்தோ சலேஹுதீன் சைதீன் தெரிவித்துள்ளார்.








