கெடா மாநிலம், படாங் தெராப் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 5-ஆம் ஆண்டு மாணவர் ஒருவர், 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார்.
இது குறித்து கெடா மாநில கல்வித் துறை வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காஃபா வகுப்பு தொடங்குவதற்கு முன்பு நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை பகுதியில் இருந்த புறாவை அந்த மாணவர் பிடிக்க முயன்ற போது கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், பலத்த காயமடைந்த அம்மாணவர் தற்போது அலோர் ஸ்டார்-இல் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.








