Jun 24, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா பள்ளிக் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் காயம்
தற்போதைய செய்திகள்

மலாக்கா பள்ளிக் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் காயம்

Share:

மலாக்கா மாநிலம் பத்து பெரண்டாம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவர், நேற்று பள்ளிக் கட்டிடத்தின் நடைபாதை பகுதியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 வயதுடைய அம்மாணவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சக மாணவர் ஒருவர் அவரது காலணியை பள்ளி கட்டிடத்தின் கூரையின் மீது எறிந்ததாகவும், அதை எடுக்க முயன்றபோது மாணவன் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

மழையால் தரையும் கூரையும் ஈரமாகவும் வழுக்கலாகவும் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துப் போலீசில் புகார் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்துள்ளார்.

Related News