May 21, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் விலகினார்
தற்போதைய செய்திகள்

பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் விலகினார்

Share:

பிகேஆர் கட்சியின் தொடக்க கால உறுப்பினரும், அக்கட்சி முன்னெடுத்த சீர்த்திருத்தங்களுக்கு துணையாக நின்றவருமான அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் வழக்கறிஞர் N. சுரேந்திரன், பிகேஆர் விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியின் முன்னாள் Padang Serai எம்.பி.யான சுரேந்திரன், அக்கட்சி வாக்குறுதி அளித்து இருந்ததைப் போன்று சீர்த்திருத்தங்களை செய்யத் தவறிவிட்டதாக சுரேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தண்டனை காலம் குறைக்கப்பட்டது குறித்து கருத்துரைத்ததற்காக தேச நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் டிஏபியை சேர்ந்த முன்னாள் டாமன்சாரா எம்.பி. Tony Pua விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து மெளனம் சாதித்து வருவது வெட்கக்கேடானதாகும் என்று சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நஜீப் விவகாரத்தில், அது முன்னாள் மாமன்னரின் முடிவு என்று கூறி, அதில் தமக்கு சம்பந்தமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்ததை பிகேஆர் கட்சியின் முன்னாள் நிர்வாக மன்ற உறுப்பினரும், மலேசிய லஞ்ச ஒழிப்பு வாரியத்தின் முன்னாள் தலைமை ஆணையருமானர் Latheefa koya நேற்று முன்தினம் கடுமையாக சாடிய வேளையில், இன்று வழக்கறிஞர் சுரேந்திரனும் குறைகூறியுள்ளார்.`

Related News