பட்டர்வொர்த்தில் ஓர் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி சம்பவம் தொடர்பில் ஒரே வீட்டில் தங்கியிருந்த ஓர் உள்ளூர் ஆடவரையும், ஓர் அந்நியப் பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
32 மற்றும் 37 வயதுடைய அந்த ஆணும் பெண்ணும் நேற்று இரவு 8.30 மணியளவில் அந்த வீடமைப்புப்பகுதியில் வெவ்வேறு இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அஸ்ரி ஷஃபி தெரிவித்தார்.
வெடிமருந்தாக இருக்கலாம் என்று நம்பப்படும் வெடிப்பொருள் ஒன்று அந்த அடுக்கு மாடி வீடமைப்புப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு முன்பு நிகழ்ந்த வெடி சம்பவத்திற்கும் பிடிபட்ட இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.








