May 22, 2026
Thisaigal NewsYouTube
திசைகளுக்கு நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

திசைகளுக்கு நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது

Share:

கெடா, மே 28-

கெடா, கூலிம் நகராண்மை கழகத்துடன் இணைந்து செய்து துறையில் கூட்டு பங்களிப்பை வழங்கியதற்காக YouTube அலைவரிசையான திசைகளுக்கு நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

கூலிம், நகராண்மை கழக தலைவர் டத்தோ ஹாஜி எல்மி யூசோப் முன்னிலையில் நேற்று, கூலிம் இன் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திசைகள் சார்பில் கெடா மாநில செய்தியாளரான ஹேமா எம் எஸ் மணியம் அவ்விருதையும் பாராட்டு பத்திரத்தையும் பெற்றார்.

மொத்தம் 6 விருதுகளில் சிறந்த மூன்று விருதுகளில் ஒன்றை திசைகள் கைப்பற்றியது. திசைகளுக்காக இவ்விருதைப் பெற்ற செய்தியாளர் ஹேமா கூறுகையில், கூலிம் மாவட்ட மேம்பாட்டு பணிகள் தொடர்பான விரிவான முறையில் தகவல்களை வழங்கி கூலிம் மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கூலிம் நகராண்மை கழகம் மேற்கொள்ளும் ஓரிட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பான செய்திகளை நிறைவான முறையில் வழங்கியதற்காகவும் இவ்விருது கிடைத்திருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Related News