May 22, 2026
Thisaigal NewsYouTube
அகதிக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் நபர் கைது
தற்போதைய செய்திகள்

அகதிக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் நபர் கைது

Share:

பினாங்கில் தன்னை போலீஸ்காரர் என்று அடையாளம் கூறிக்கொண்டு வழிபறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் அடையாள அட்டையை வைத்திருந்த அந்நிய நாட்டவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயதுடைய அந்த இளைஞர், நேற்று பின்னிரவு 12.25 மணியளவில் Gelugor, Desa Permai Indah, Lorong Sungai Dua-வில் உள்ள கார் கழுவும் மையத்தின் முன்புறம் கைது செய்யப்பட்டதாக Barat Daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Jafri Muhammed Zain தெரிவித்துள்ளார்.

அண்மையில் Bayan Baru-வில் 28 வயதுடைய அந்நிய நாட்டவர் வழிமறிக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நபர் போலீஸ் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த வழிபறி கொள்ளையன் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக Jafri Muhammed குறிப்பிட்டார்.

Related News