Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது

Share:

நிலாய், மார்ச் 23.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 283 ஆவது கிலோமீட்டரில் தெற்கை நோக்கி, நிலாய் அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு 20 மாத கைக்குழந்தை ஒன்று காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக மாண்டது. .

கடந்த வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் பெரோடுவா பெட்சா ரகத்தை சேர்ந்த இரு கார்கள் மற்றும் டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம் ஒன்று சம்பந்தப்பட்ட இவ்விபத்தில் காரிலிருந்து அந்த பெண் குழந்தை தூக்கி எறியப்பட்டதாக நிலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கி நான்கு பயணிகளுடன் 24 வயது ஆடவர் செலுத்திய டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற பெரோடுவா பெட்சா காரை மோதியதில் அந்த கார் மற்றொரு பெரோடுவா பெட்சா காரை மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தலையில் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த குழந்தை சிரம்பான், துவான்க்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் குழந்தை மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அப்துல் மாலிக் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்