Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பயங்கர தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை போலீஸ் கைது செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

பயங்கர தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை போலீஸ் கைது செய்துள்ளது

Share:

குளுவாங், தாமான் லியான் செங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவ தொடர்பில், மூன்று பேரை தனி தனி சோதனையின் போது போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் சிம்பாங் ரெங்காம் மற்றும் இஸ்கண்டார் புத்ரி ஆகிய இடங்களில் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் போதைப் பொருள் எதுவும் உட்கொள்ளாதது சோதனையில் தெரிய வந்த வேளை, அதில் ஒருவர் மீது ஏற்கனவே இரண்டு குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை அந்நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுக்கு அவர் இலக்காகியிருப்பதாக பஹ்ரின் முகமது கூறினார்.

முன்னதாக, ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறைக்கு முன்பு நபர் ஒருவரை மூன்று பேர் வன்மையான முறையில் தாக்குவதை போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்