Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விற்பனை சேவை வரி விதிப்பில் தெளிவான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் – பெரிக்காத்தான் நேஷனல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விற்பனை சேவை வரி விதிப்பில் தெளிவான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் – பெரிக்காத்தான் நேஷனல்

கோலாலம்பூர், ஜூன்.15-

ஜூலை 1 ஆம் தேதி முதல் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரி விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அரசாங்கம் ஒரு முழுமையான, தெளிவான வரி விதிப்புக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தகவல் தலைவர் ரட்ஸி ஜிடின் வலியுறுத்தினார். பெரும்பாலான மக்களுக்குச் சுமையாக இல்லாத ஓர் அமைப்பை அரசாங்கம் உருவாக்கும் வரை இந்த கொள்கையை இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ரோன்95 பெட்ரோல் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டத்தையும், மின்சாரக் கட்டணச் சரி செய்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று பிஎன் மேலும் வலியுறுத்தியது. இந்நிலையில், இந்த புதிய வரிக் கொள்கைகள் மூலம் கிடைக்கும் வருமானம், B40, M40 பிரிவினர் உட்பட பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவிகளை வழங்க அரசாங்கத்திற்கு உதவும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →