Jul 27, 2026
Thisaigal NewsYouTube
''வாட்சப்'' விவாகரத்து, காரை சேதப்படுத்திய பெண்ணுக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

''வாட்சப்'' விவாகரத்து, காரை சேதப்படுத்திய பெண்ணுக்கு அபராதம்

Share:

திருமணமாகி மூன்று மாதங்களுக்கு பிறகு, ''வாட்சப்'' 'talak 3' - யின் மூலம் விவாகரத்து செய்ததை தொடர்ந்து தனது முன்னாள் கணவரின் காரை சேதப்படுத்திய குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை அல்லது 1,000 வெள்ளி அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

'டத்தோ' பட்டம் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான அப்பெண்ணின் முன்னாள் கணவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதன் விளைவாக அவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வாட்சப்-யில் விவாகரத்து செய்ததாக தெரியவந்துள்ளது.

அந்நபர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி வாட்சப்- 'talak 3' -யில் விவாகரத்து செய்தியை அனுப்பியதுடன் முன்னாள் மனைவி அவருக்கு சொந்தமான வங்கி கணக்கு அட்டையை திருடியதாக காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து, அப்பெண் ஆத்திரமடைந்து முன்னாள் கணவரின் BMW 530 ரக வாகன கண்ணாடியை சேதப்படுத்திய குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்