Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலமான கெந்திங் மலைக்குச் செல்லும் தனியார் சாலையில் கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கும் என Lingkaran Cekap Sdn Bhd நிறுவனம் அறிவித்துள்ளது.

கெந்திங் செம்பா (Genting Sempah) மற்றும் கோத்தோங் ஜெயா (Gohtong Jaya) வட்டச் சாலை ஆகிய இரண்டு நுழைவுப் புள்ளிகளில் இந்தச் சோதனை நடைபெறும்.

இந்த வெள்ளோட்டக் காலத்தின் போது பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இருப்பினும், அமைப்பின் செயல்பாட்டை உறுதிச் செய்ய, வாகன ஓட்டிகள் தங்கள் Touch ‘n Go, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை நுழைவாயிலில் உரசிச் செல்ல வேண்டும்.

இந்தச் சோதனை ஓட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த சுற்றுலாத் தலத்தை நிர்வகித்து வரும் கெந்திங் மலேசியா நிறுவனம் தனது தனியார் சாலையைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்கப் போவதாக கடந்த ஆண்டு நவம்பரில் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்