Jul 27, 2026
Thisaigal NewsYouTube
KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவுகள் கண்டனம்
தற்போதைய செய்திகள்

KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவுகள் கண்டனம்

Share:

பேராக், மார்ச் 27-

பேராக், பிடோர், ஜாலான் ப்ருசேஹ்-விலுள்ள KK மார்ட் கடை மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அல்லா சொல் எழுதப்பட்ட காலுறையை விற்பனை செய்த சர்ச்சையை KK மார்ட் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சூழலில், அந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அக்மால் சாலெஹ் கூறினார்.

இந்நிலையில், KK மார்ட் கடை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், நிலைமையை தணிக்க செய்ய அனைத்து தரப்பினரும் அவ்விவகாரத்தை போலிசிடம் விட்டுவிட வேண்டும். போலீஸ் விசாரணையை மேற்கொண்ட பிறகு, அந்த இழிச்செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

சர்ச்சைக்குரிய காலுறை விற்கப்பட்ட விவகாரத்தில், KK மார்ட் நிறுவனத்திற்கு எதிராக டாக்டர் அக்மால் சாலெஹ் தொடர்ந்து முன்னெடுத்துவரும் பிரச்சாரத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, KK மார்ட் கடை மீது மீதான தாக்குதலை கண்டித்துள்ள பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் பத்லி ஸாரி, எந்தவொரு தரப்பினரும் போலீசின் விசாரணையை மீறி செயல்படக்கூடாது என வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்