May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் வைத்திருந்ததாக பாடகர் கிளிஃப் உமர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்ததாக பாடகர் கிளிஃப் உமர் மீது குற்றச்சாட்டு

Share:

ஷாஹ் அலாம், மே 30-

ஹெராயின் வகையைச் சேர்ந்த போதைப்பொருளை வைத்திருந்ததாக பிரபல பாடகர் ஒருவர் ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

42 வயது கிளிஃப் உமர் என்றழைக்கப்படும் அப்துல்லா உமர் ஜோசப் என்கிற அந்த பிரபல பாடகர் மாஜிஸ்திரேட் சாஷா டயானா சப்து முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது 100,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 12 (3) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 26 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் சிலாங்கூர், சுபாங் ஜெயா, ஜாலான் பெர்சியாரன் கேவாஜிபன் அருகே 0.39 கிராம் ஹெராயின் வகையை சேர்ந்த போதைப்பொருளை வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News