Oct 10, 2026
Thisaigal NewsYouTube

உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்கள் : நாட்டிற்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அமைச்சரவையில் பேசப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்கள் : நாட்டிற்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அமைச்சரவையில் பேசப்படும்

பெருவாஸ், ஜூன்.15-

உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக, அதிகரித்து வரும் எண்ணெய் விலையும் உணவு இறக்குமதி விநியோகச் சங்கிலி குறுக்கீடுகளும் அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்துக் கவலை தெரிவித்த அவர், ஈரான் மீதான தடைகள் காரணமாக அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார். உலகளாவிய நிலையில் பொருளாதாரமும் அரசியல் சூழ்நிலையும் நிச்சயமற்றதாக இருக்கின்ற வேளையிலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் சிறந்த அணுகுமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →