Sep 28, 2026
Thisaigal NewsYouTube
வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

Share:

நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பநிலையை முன்னிட்டு, மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து நிலவி வரும் வெப்ப அலை ஜூன் மாத நடுப்பகுதி வரை நீடிக்கக்கூடும் என்பதால், மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு வெளிப்புற செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும் பொதுமக்களை மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக தீ விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையும் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவக்கூடும் என்பதால், பொதுமக்கள் திறந்த வெளியில் தீ மூட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நேற்று அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்