Jun 13, 2026
Thisaigal NewsYouTube
அனுமதியின்றி கட்டடம் கட்டினால் நீர், மின்சாரம் துண்டிக்கப்படும்: அமைச்சர் ஙா கோர் மிங்
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி கட்டடம் கட்டினால் நீர், மின்சாரம் துண்டிக்கப்படும்: அமைச்சர் ஙா கோர் மிங்

Share:

உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாகக் கட்டடங்களைக் கட்டுவது மற்றும் ரோஹிங்கியா போன்ற வெளிநாட்டினரின் சட்டவிரோதக் குடியேற்றங்கள் உருவாவதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று வீடமைப்பு, உராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஒப்புதல் பெறாத கட்டடங்களுக்கு நீர் மற்றும் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு மே மாதம் வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் வெளிநாட்டினரின் 26,108 வணிக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வெளிநாட்டினர் இங்கு தொழிலாளர்களாக மட்டுமே இருக்க முடியும், முதலாளிகளாக முடியாது என்று தெளிவுபடுத்திய அமைச்சர் ஙா கோர் மிங், சட்டவிரோதக் குடியேறிகள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, ஏழு ஆண்டுகளுக்கு மேலாகக் கணக்குகளில் முடங்கிக் கிடக்கும் 13 பில்லியன் ரிங்கிட் 'கோரப்படாத பணத்தை பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டை மற்றும் வங்கி அறிக்கை மூலமாக எளிதாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

Related News