Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சீடிம் திடீர் வெள்ளப்பெருக்கு:  மூவர் பலி; 4 வயது சிறுவன் மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை சீடிம் திடீர் வெள்ளப்பெருக்கு: மூவர் பலி; 4 வயது சிறுவன் மீட்பு

Share:

கெடா, கூலிம் மாவட்டத்திலுள்ள சுங்கை சீடிம் வனப் பூங்காவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 28 வயது மதிக்கத்தக்க நூர் அத்திக்கா பிந்தி அப்துல்லா, 12 வயது சிறுவன் முகமாட் உஜேர் அமாடி மற்றும் 3 வயது சிறுவன் முகமாட் அரிஸ் டேனியல் ஆகியோர் மரணமடைந்துள்ளதாகக் கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டென்டன் சம்சுல் சின்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆற்றின் மேற்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கே இதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த அவசர எச்சரிக்கை சைரன் பழுதடைந்திருந்ததும் இந்தத் துயரத்திற்கு வழிவகுத்துள்ளது.

இதற்கிடையில், மாலை 4.25 மணியளவில் உயிருடன் காப்பாற்றப்பட்ட 4 வயது சிறுவனுக்குப் பொதுமக்கள் முதலுதவி வழங்கி, பின்னர் அவர் மருத்துவக் குழுவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

Related News