Sep 24, 2026
Thisaigal NewsYouTube
தர்ம மடானி திட்டம்: 168 ஆலயங்களுக்கு RM3.36 மில்லியன் நிதி உதவி
தற்போதைய செய்திகள்

தர்ம மடானி திட்டம்: 168 ஆலயங்களுக்கு RM3.36 மில்லியன் நிதி உதவி

Share:

கடந்த ஜூலை 15 ஆம் தேதி புத்ராஜெயாவில், மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மித்ரா அமைப்பின் ஏற்பாட்டில், இந்திய சமூக மேம்பாட்டிற்கான 'தர்ம மடானி' திட்டத்தின் கீழ் ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சார்பில், மனிதவள அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் சுடெக்னோ அகமட் பெலோன் மற்றும் மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவீந்தரன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டு, தர்ம மடானி தொடர் 3-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள 168 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 3.36 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கான அங்கீகாரக் கடிதம் மற்றும் மாதிரி கா காசோ லைகளை ஆலயப் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆலயமும் தர்ம மடானி திட்டத்தின் கீழ் தலா 20 ஆயிரம் ரிங்கிட் பெற்றுக்கொண்டது.

இந்த அரசாங்கத்தின் நிதியுதவி, தங்களின் ஆலய மேம்பாட்டிற்கு எவ்வளவு பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது என்பது குறித்து, இந்த நிகழ்வில் பயனடைந்த 6 முக்கிய ஆலயங்களின் பொறுப்பாளர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.

மடானி அரசாங்கத்திற்கும், அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணணுக்கும், மித்ராவிற்கும் 'நன்றி ! என்று ஆலயப் பொறுப்பாளர்கள் ஒருசேர வெளிப்படுத்திய இந்த நன்றியும் மகிழ்ச்சியும், மித்ரா அமைப்பின் மூலமாக நமது இந்தியச் சமுதாயத்திற்குச் சென்றடையும் ஒவ்வொரு நிதியும் எவ்வளவு வெளிப்படையாகவும், பயனுள்ளதாகவும் மாறுகிறது என்பதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.

Related News