அடுத்தவரின் மனைவியை கவர்ந்து, தன் வசமாக்கி கொண்ட குற்றத்திற்காக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது. அபாரத் தொகையை செலுத்த தவறினால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க உத்தரவிட்டது.
48 வயதான அஸ்மி அலி என்ற அந்த முன்னாள் இராணுவ அதிகாரி, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், பண்டார் புத்ரா பெர்மையை சேர்ந்த 44 வயது மாதுவுடன் அந்தரங்க தொடர்பில் இருந்து, வசமாக்கிக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இராணுவ அதிகாரியின் செயலால் தமது கூட்டு குடும்பமே சிதறு ண்டு, மகிழ்ச்சியை இழந்து, கணவர், மனைவி, பிள்ளைகள் என தனித்தனியாக பிரிய வேண்டிய துர்பாக்கியத்திற்கு தாம் ஆளாகியதாக அந்த மாதுவின் கணவர் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து அந்த முன்னாள் இராணுவ அதிகாரி பிடிபட்டார்.








