Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து அட்டூழியம்  இருவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் இருவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் சுல்தான் அப்துல் சாமாட் டில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில், கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அட்டூழியம் புரிந்த சம்பவம் தொடர்பில் பெண் பக்தர் ஒருவரிடம் பாலியல் சேட்டை புரிந்த ஒருவர், பிடிபட்டுள்ள வேளையில் பெண் பக்தர்களின் கைப்பேசிகளை பறித்து, உடைத்து சேதம் விளைவித்த இருவர், கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஸ்ரீ சிவன் ஆலயத்திற்குள் நுழைந்து பெண் பக்தர் ஒருவரின் தொடையில் கையை வைத்து, பாலியல் சேட்டை புரிந்ததாக நம்பப்படும் 32 வயது நபர், கைது செய்யப்பட்டு, போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள வேளையில் பெண் பக்தர்களின் கைப்பேசியை பறித்து, உடைத்து சேதப்படுத்தியதாக இரு இந்திய நபர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். .

அம்பாங்கை சேர்ந்த சிவகுமார் லிங்கம் என்ற நபர், ஆலயத்தில் இருந்த ஒரு பெண் பக்தரான 50 வயது கலைச்செல்வி கிருஷ்ணன் என்பவரின் கைப்பேசியை , உடைத்து, சேதப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 2 மாத சிறைத் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.

கோலாலபூர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தை சேர்ந்த மற்றொரு நபரான கண்ணபரான் அழகப்பன் என்பவர் , ஒரு பெண் பக்தரான 38 வயது திலகேஷ்வரி சுப்பிரமணியம் என்பவரின் கைப்பேசியை உடைத்த குற்றத்திற்காக 2,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்