Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு
தற்போதைய செய்திகள்

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

Share:

ஜோகூர், ஏப்ரல்.05-

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மக்களின் நலனைப் பாதுகாக்க மடானி அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் மக்களிடம் விரிவாகக் கொண்டுச் செல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். ஜோகூர் மாநில கெஅடிலான் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், எரிபொருள் மானியம், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போன்ற அரசின் திட்டங்கள் தகுதியுள்ள நபர்களைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும் என்றும், கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், பொய்ப் செய்திகளால் மக்களிடையே ஏற்படும் அச்சத்தைப் போக்கி, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை குறித்த சரியான தகவல்களைத் தெளிவுபடுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளும் கட்சி இயந்திரங்களும் பாலமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News