Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் வறட்சி: அணைக்கட்டுகளின் நீர் மட்டத்தை அரசாங்கம் தீவிரமாகத் கண்காணிக்கிறது
தற்போதைய செய்திகள்

பேரா மாநிலத்தில் வறட்சி: அணைக்கட்டுகளின் நீர் மட்டத்தை அரசாங்கம் தீவிரமாகத் கண்காணிக்கிறது

Share:

ஈப்போ, ஏப்ரல்.05-

பேரா மாநிலத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாக மாநில உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர், பொதுப் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ முஹமட் நிஸார் ஜமாலுடின் தெரிவித்தார். முக்கிய அணைக்கட்டுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதால், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தற்போதைக்கு நிலைமை அபாயக் கட்டத்தை எட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வறட்சி நீடித்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீர்த் தொட்டிகளை அனுப்புவது, கூடுதல் பம்புகளைப் பயன்படுத்துவது போன்ற மாற்று நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்ட அவர், தற்போதைக்குத் தங்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.

Related News