சுமார் 2 மணி நேரம் பெய்த கனத்த மழையில் வெள்ளக்காடாக மாறிய தஞ்சோங் மாலிம், பெஹ்ராங், சிங்காங் கிராமம் கிராமத்சைச் சேர்ந்த 433 பேர், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தினால் மொத்தம் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக மூவாலிம் மாவட்ட இயற்கை பேரிடர் மேலாண்மைக்குழுப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் நேற்று இரவு 7.30 மணி முதல் கம்போங் சிங்கோங், சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.அப்பகுதியில் பிரதான ஆறான சுங்கை பெஹ்ராங் ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடி இரு மருங்குகளிலும் நீர் புகுந்ததால் கம்போங் சிங்கோங் கிராமம் வெகுவாக பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


